டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கேலி செய்தவரை அறைந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்: முகத்தில் 118 தையல்

பெண்ணின் முகத்தில் பிளேடால் தாக்கியதில், அவரது முகத்தில் 118 தையல்கள் போடப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
கேலி செய்தவரை அறைந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்: முகத்தில் 118 தையல்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:31 am

DIN


போபால்: தன்னை கேலி செய்தவர்களில் ஒருவரின் கன்னத்தில் அறைந்த பெண்ணின் முகத்தில் பிளேடால் தாக்கியதில், அவரது முகத்தில் 118 தையல்கள் போடப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 9ஆம் தேதி, மூன்று இளைஞர்கள் 40 வயது பெண்ணை கேலி, கிண்டல் செய்துள்ளனர். அவர்களில் ஒருவரை அப்பெண் கன்னத்தில்  அறைந்ததையடுத்து, அப்பெண்ணின் முகத்தில் அவர்கள் பிளேடால் தாக்கியுள்ளனர். பிளேடால் வெட்டப்பட்ட காயங்களை மருத்துவர்கள் 118 தையல்கள் போட்டு சரி செய்துள்ளனர்.

மூன்று குற்றவாளிகளில் இரண்டு பேர் சிறார்கள் என்று கூறப்படுகிறது. மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேர் மீதும் கடுமையான சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர், மண்டல ஆணையர் மற்றும் இதர அரசு அதிகாரிகளை தனது இல்லத்தில் நேற்று சந்தித்த சிவ்ராஜ் சிங் இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு எதிரான கடுமையான சட்டங்களின் வழக்குப் பதிவு செய்து, கடும் தண்டனை பெற்றுத் தர வலியுறுத்தினார்.

குற்றத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி பாத்ஷா பேக் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவரது வீடு பொதுப் பணித் துறையினரால் நேற்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. 

பாதிக்கப்பட்ட பெண்ணை, முதல்வர் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்ததோடு, ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவிட்டார். மேலும், அப்பெண்ணின் மூன்று குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் உறுதிமொழி அளித்தார்.

இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கும் அப்பெண்ணின் குடும்பத்தினர், போபாலில் இருப்பது தங்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்று கருதுவதாகக் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.