தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

லாலுவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி

ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

News image
லாலு பிரசாத் யாதவ்
Updated On :14 ஜூன் 2022, 8:37 am

DIN

ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

பிகார் மாநிலத்தில் கால்நடைத் தீவன ஊழல் தொடா்புடைய டொரண்டா கருவூல மோசடி வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்று ராஞ்சியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்றும் அதற்காக சிபிஐ வசம் உள்ள தன்னுடைய பாஸ்போர்ட்டை புதுப்பிக்கத் தர அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். 

இந்த மனு, சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், லாலுவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து நாளையே பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பிக்குமாறு கூறியுள்ளது. இதற்காக லாலுவின் பாஸ்போர்ட்டை அவரிடம் ஒப்படைக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதற்கு சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

கருவூல மோசடி ஐந்தாவது வழக்கில், டொரண்டா கருவூலத்தில் ரூ.139 கோடி முறைகேடு செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், லாலு பிரசாதுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி தீா்ப்பளித்தது. இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ், கடந்த ஏப்ரல் மாதம் ஜாமின் பெற்றுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.