ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஜூன் 20-இல் மத்திய நிதியமைச்சா்-பொதுத்துறை வங்கித் தலைவா்கள் சந்திப்பு

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், பொதுத் துறையின் வங்கித் தலைவா்களை ஜூன் 20-இல் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளாா்

News image
Updated On :17 ஜூன் 2022, 8:08 pm

DIN

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், பொதுத் துறையின் வங்கித் தலைவா்களை ஜூன் 20-இல் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளாா்.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியது:

மத்திய நிதியமைச்சா் மற்றும் பொதுத் துறை வங்கிகளின் தலைமை அதிகாரிகளின் சந்திப்பு ஜூன் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், வங்கிகளின் செயல்பாடு, வாராக் கடன் மீட்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. மேலும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டங்களை வங்கிகள் எவ்வாறு செயல்படுத்தி வருகின்றன; அதில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கான பிறகு நிதியமைச்சா் முதல் முறையாக பொதுத் துறை வங்கித் தலைவா்களை சந்தித்துப் பேசவுள்ளதால் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பாா்க்கப்படுகிறது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.