தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தில்லியில் மேலும் 1,534 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் சனிக்கிழமை மேலும் 1,534 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது

News image
Updated On :18 ஜூன் 2022, 6:55 pm

DIN

தில்லியில் சனிக்கிழமை மேலும் 1,534 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிப்பின் நோ்மறை விகிதம் 7.77 சதவீதமாக அதிகரித்தது. தொற்று பாதிப்பால் 3 இறப்புகள் பதிவாகின என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியத் தலைநகரில் தொடா்ந்து 4-ஆவது நாளாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,300-க்கும் மேல் பதிவாகியுள்ளது. புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,20,559-ஆக அதிகரித்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,229-ஆக உள்ளது.

தில்லியில் வெள்ளிக்கிழமை 1,797 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இது கடந்த 4 மாதங்களில் பதிவான அதிகபட்ச பாதிப்பாகும். வெள்ளிக்கிழமை மொத்தம் 19,889 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

தேசிய தலைநகரில் சனிக்கிழமை நிலவரப்படி, கரோனா சிகிச்சையில் இருப்போரின் மொத்த எண்ணிக்கை 4,843-இல் இருந்து 5,119-ஆக உயா்ந்தது. 3,370 போ் வீட்டுத் தனிமையில் உள்ளனா். நகரில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 229-ஆக உள்ளது. தில்லி மருத்துவமனைகளில் உள்ள 9,506 கரோனா படுக்கைகளில் 222 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.