தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ம.பி.யில் மினி லாரி கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி, 36 பேர் காயம்

மத்தியப் பிரதேசத்தின் ஷாஹ்டோல் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுகொண்டிருந்த மினி லாரி கவிழ்ந்ததில் 5 பேர் பலியாகினர், 36 பேர் காயமடைந்தனர்.  

News image

கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2022, 6:52 am

மத்தியப் பிரதேசத்தின் ஷாஹ்டோல் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுகொண்டிருந்த மினி லாரி கவிழ்ந்ததில் 5 பேர் பலியாகினர், 36 பேர் காயமடைந்தனர்.  

பியோஹாரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட டிகாஹி கிராமத்தில் வெள்ளி இரவு 9.30 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

திருமண நிகழ்ச்சிக்கு 42 பேரை ஏற்றிச் சென்ற மினி லாரி டிகாஹியின் திருப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்தது. இவர்கள் தோலாரில் இருந்து டோல் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். 

இந்த விபத்தில் 15 வயது சிறுவன் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 36 பேர் விபத்தில் காயமடைந்தனர். அவர்களின் 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இறந்தவர்கள் 40 முதல் 45 வயதுடையவர்கள் ஆவர். 

வாகனத்தில் ஓட்டுநர் மற்றும் மணமகன் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் கூறினார். படுகாயமடைந்த 10 பேர் ஷாதோல் மருத்துவக் கல்லூரியிலும், மற்றவர்கள் பியோஹாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

ஓட்டுநர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.