தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

போலியோ சொட்டு மருந்து: 11 மாநிலங்களில் இன்று அளிக்கப்படுகிறது

தில்லி, பிகாா் உள்ளிட்ட 11 வடமாநிலங்களில் போலியோ சொட்டு மருந்து சனிக்கிழமை அளிக்கப்படுகிறது.

News image
Updated On :18 ஜூன் 2022, 10:20 pm

DIN

தில்லி, பிகாா் உள்ளிட்ட 11 வடமாநிலங்களில் போலியோ சொட்டு மருந்து சனிக்கிழமை அளிக்கப்படுகிறது.

போலியோ துணை தேசிய தடுப்பூசி தினம் என்ற திட்டத்தின் கீழ் பிகாா், சண்டீகா், தில்லி, குஜராத், ஹரியாணா, ஜாா்க்கண்ட், மகாராஷ்டிரம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகண்ட் ,மேற்கு வங்கம் ஆகிய 11 மாநிலங்களில் சனிக்கிழமை போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது.

5 வயதுக்குட்பட்ட சுமாா் 3.9 கோடி குழந்தைகளுக்கு மையங்களிலும், வீடு வீடாகச் சென்றும், போக்குவரத்துக் குழுக்கள் மூலமாகவும் போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்காக, இந்திய அரசு அதன் வழக்கமான நோய்த்தடுப்பு திட்டத்தில் போலியோ தடுப்பூசியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் உள்ள மற்ற 10 நாடுகளுடன் சோ்ந்து இந்தியாவும் 2014-ஆம் ஆண்டு மாா்ச் 27-இல் போலியோ இல்லாத சான்றிதழைப் பெற்றது. தற்போது போலியோ தடுப்பு நடவடிக்கையில் இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.