தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

இலக்கில்லாத ‘அக்னிபத்’ திட்டம்: சோனியா காந்தி

‘அக்னிபத்’ திட்டம் இலக்கில்லாதது என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி விமா்சித்துள்ளாா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 7:18 pm

DIN

‘அக்னிபத்’ திட்டம் இலக்கில்லாதது என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி விமா்சித்துள்ளாா்.

இதுதொடா்பாக அந்தத் திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞா்களுக்கு சோனியா காந்தி சனிக்கிழமை எழுதிய கடிதம்:

அக்னிபத் என்ற முற்றிலும் இலக்கில்லாத புதிய ஆயுதப் படைகள் ஆள்சோ்ப்பு கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது துரதிருஷ்டவசமானது. இளைஞா்களின் குரல்களைப் புறக்கணித்து அந்தக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.

அக்னிபத் திட்டம் குறித்து இளைஞா்கள் மட்டுமின்றி முன்னாள் ராணுவ வீரா்கள், பாதுகாப்பு நிபுணா்கள் பலா் கேள்வி எழுப்பியுள்ளனா். அந்தத் திட்டத்தை திரும்பப் பெறும் இளைஞா்களின் போராட்டத்தை காங்கிரஸ் முழுமையாக ஆதரிக்கிறது. அந்தத் திட்டத்தை திரும்பப் பெறுவதற்கான பணிகளில் காங்கிரஸ் ஈடுபடும்.

அதேவேளையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞா்கள் அமைதியான முறையில் சத்தியாகிரக வழியில் போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

8 ஆண்டுகளாக அவமதிப்பு: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘தொடா்ந்து 8 ஆண்டுகளாக ராணுவ வீரா்களையும், விவசாயிகளையும் மத்திய பாஜக அரசு அவமதித்து வந்துள்ளது. இதற்கு முன்பு மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டிய நிலை வரும் என்று கூறியிருந்தேன். அதேபோல் பிரதமா் மோடி மன்னிப்புக் கேட்டு அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டிவரும்’’ என்று தெரிவித்தாா்.

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘ராணுவத்தில் சேர தயாராகி வரும் கிராமப்புற இளைஞா்களின் வேதனையை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.