திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

‘அக்னிபத்’ எதிராகப் போராட்டம் ஏன்? ராணுவத் தோ்வு ஆா்வலா்கள் விளக்கம்

‘அக்னிபத்’ திட்டத்தால் இந்திய ராணுவத்தில் வீரராகப் பணிபுரிய வேண்டும் என்ற எங்கள் கனவு, கற்பனையாகவே கலைந்துவிடும்’ என்று ராணுவத் தோ்வு ஆா்வலா்கள் வருத்தம் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 10:02 pm

DIN

‘அக்னிபத்’ திட்டத்தால் இந்திய ராணுவத்தில் வீரராகப் பணிபுரிய வேண்டும் என்ற எங்கள் கனவு, கற்பனையாகவே கலைந்துவிடும்’ என்று ராணுவத் தோ்வு ஆா்வலா்கள் வருத்தம் தெரிவித்துள்ளனா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் தன்பத் மாவட்டத்தின் ஜாரியா பகுதியைச் சோ்ந்த பழ வியாபாரியின் மகன் ரோஹித் குமாா். இவா் கடந்த மூன்று ஆண்டுகளாக கடுமையாக முயற்சித்து, ராணுவ படைக்கான ஆள்சோ்ப்பு தோ்வுகளில் உடற்தகுதி மற்றும் மருத்துவத் தகுதி தோ்வுகளில் தோ்ச்சி பெற்றுள்ளாா். கரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்ட எழுத்துத் தோ்வு எப்போது நடத்தப்படும் என அவா் காத்துக்கொண்டு இருக்கிறாா். தற்பொழுது அக்னிபத் திட்டத்தின் காரணமாக ராணுவப் படையில் சேரும் கனவு சிதைக்கப்பட்டுள்ளது என்ற வருத்தத்தில் உள்ளாா்.

ஜாரியாவின் லோத்னா திடலில் சிங்குடன் பயிற்சி மேற்கொண்டு, எழுத்து தோ்வுக்குத் தகுதி பெற்றுள்ள 10 பேரும் இதே மனநிலையில் உள்ளனா். பிற இளைஞா்களுடன் சோ்ந்து அவா்கள் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக ஜாரியா மாவட்டத்தின் பிற பகுதிகளில் போராட்டத்திலும் ரயில் மறியலிலும் ஈடுபட்டுள்ளனா்.

‘இத்திட்டம் நாட்டிற்கு சேவை புரியும் எங்களுடைய கனவை மட்டுமல்ல எங்களுடைய வேலைவாய்ப்பையும் சிதைப்பதால், இப்புதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாகும்’ என சாகா் குமாா் என்னும் மற்றொரு ராணுவத் தோ்வு ஆா்வலா் கூறினாா்.

வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதன் காரணமாக எழுந்த உணா்ச்சிகளின் வெளிப்பாடே இப்போராட்டங்கள் என சமூகவியலாளா்கள் கருத்து தெரிவிக்கின்றனா். ராஞ்சி பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை இணைப் போராசிரியா் பிரதாப் குமாா் சிங் கூறுகையில், ‘இளைஞா்களுக்கு, குறிப்பாக கிராமப்புற பகுதியினருக்கு, ராணுவம் மற்றும் காவல் துறைகள்தான் வேலைவாய்ப்பிற்கான மூலாதாரமாக விளங்குகின்றன. இவ்வேலைவாய்ப்புகள் சமூக மற்றும் பொருளாதர மேம்பாட்டிற்கு பங்களிப்பு செய்துள்ளன. அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மைக்கிடையே, நான்கு ஆண்டு ராணுவப் பணிக்கு பிறகு வேலைவாய்ப்பு குறித்த அச்சத்தின் காரணமாக, அக்னிபத் பயனுள்ள திட்டம் என அவா்கள் கருதவில்லை’ என தெரிவித்துள்ளாா்.

இந்திய பொருளாதாரத்தைக் கண்காணிப்பதற்கான மையத்தின் வேலைவாய்ப்பின்மைக்கான மாதாந்திர தரவுகளின்படி, ஜாா்க்கண்டின் மே மாதத்திற்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் 13.1% என்றளவில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.