
கராச்சியில் உள்ள மாலிர் மாவட்ட சிறையில் இருந்து 20 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்களின் பயணச் செலவுகளை எதி அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது. மேலும் அவர்களுக்கு உடைகள், ரேஷன், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
கடல் எல்லை மீறி மீன்பிடித்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட அவர்களின் தண்டனைக் காலம் முடிந்து விடுவிக்கப்பட்டனர்
விடுவிக்கப்பட்டவர்களில் காஞ்சி, மனு, டானா, ஜீவா, ரமேஷ், தினேஷ், டேவிஸ், மிரோ, நரேன், பன்ரா, லால்ஜி, நாஞ்சி, அபு உமர், யூனிஸ், நிசார், அகீல், அமீன், ஃபரித், அனிஸ் மற்றும் தினேஷ் ஆகியோர் அடங்குவர்.
இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு மாற்றப்படும் போது, நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக மாலிர் மாவட்ட சிறைச்சாலையின் மூத்த கண்காணிப்பாளர் முஹம்மது அர்ஷாத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






