12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

விஷால் இயக்கி நடிக்கும் மகுடம் படத்தின் முதல் பாடல்!

நடிகர் விஷாலின் “மகுடம்” படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது குறித்து...

vishal's magudam

மகுடம் படத்தின் முதல் பாடல் வெளியீடு... - youtube

Published On :

நடிகர் விஷால் இயக்கி நாயகனாக நடிக்கும் “மகுடம்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால் இயக்கி நாயகனாக நடிக்கும் புதிய படம் “மகுடம்”. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சூப்பர்குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

நடிகர்கள் அஞ்சலி, துஷரா விஜயன், ஜான் விஜய், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தின் டீசர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், மகுடம் திரைப்படத்தின் “ரைஸ் ஆஃப் லிங்கா” எனும் முதல் பாடலை இன்று (ஜூன் 19) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இத்துடன், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள “மகுடம்” திரைப்படம் வரும் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The first song from the movie "Magudam," directed by and starring Vishal, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.