எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் பொது வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹ ஜூன் 27ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் பொது வேட்பாளராக எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், திரிணமூல் கட்சி மூத்த தலைவராக இருந்தவருமான யஷ்வந்த் சின்ஹவை இன்று எதிர்க்கட்சிகள் ஒருமனதாக அறிவித்தனர்.
இதையும் படிக்க | யஷ்வந்த் சின்ஹ யார்? - முழு விவரம்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், “குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹ ஜூன் 27ஆம் தேதி காலை 11.30 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார்” என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பாரூக் அப்துல்லா, மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோர் மறுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

டிஆர்டிஓவில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!

பதவி உயர்வு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஹைதராபாத் - கன்னியாகுமரி, கச்சிகுடா - மதுரை சிறப்பு ரயில்கள் நிரந்தரம்!

கட்சி தலைமை அனுமதித்தால் தோ்தலில் போட்டி: தமிழிசை
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

