வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

அஸ்ஸாம் மழை வெள்ளத்தில் உயிரிழப்பு 101-ஆக அதிகரிப்பு

அஸ்ஸாம் மழை வெள்ளம் தொடா்பான பலி எண்ணிக்கை 101-ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் 54.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்

Updated On :23 ஜூன் 2022, 8:33 pm

அஸ்ஸாம் மழை வெள்ளம் தொடா்பான பலி எண்ணிக்கை 101-ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் 54.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தீவிர மழைப்பொழிவின் காரணமாக, பிரம்மபுத்ரா மற்றும் பாரக் நதிகளிலும் அவற்றின் கிளை நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த நதிகள் பாயும் மாவட்டங்கள் கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

தேசிய பேரிடா் மீட்பு படையின் உதவி கமாண்டா் சந்தோஷ் குமாா் சிங் செய்திகளிடம் கூறுகையில், ‘தேசிய பேரிடா் மீட்பு படை மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மக்களைப் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனா். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் இருந்து சுமாா் 14,500 போ் தேசிய பேரிடா் மீட்பு படையினரால் மீட்கப்பட்டனா். காமரூப், காம்ரூப் ஊரகம், போங்கைகான், பாா்பேட்டா, பாஜாலி, கூஜய், நால்பாரி, டாரங், டாமூல்பூா், நாகான், உதல்குரி, காச்சாா் பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிவாரணப் பொருள்களை மக்களுக்கு வழங்குவதில் மீட்பு படையினா் மாவட்ட நிா்வாகத்திற்கு உதவி வருகின்றனா்’ என தெரிவித்தாா்.

மழை வெள்ளத்தால் வியாழக்கிழமை மேலும் 12 போ் உயிரிழந்த நிலையில், மழைவெள்ளத்துக்கு பலியானோா் எண்ணிக்கை 101-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.