தில்லியில் மேலும் 1,934 பேருக்கு கரோனா பாதிப்பு: பிப்.4-க்குப் பிறகு அதிகபட்ச பதிவு
தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 1,934 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 1,934 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதிக்குப் பிறகு பதிவாகும் அதிகபட்ச பாதிப்பாகும். கடந்த ஒரு வாரமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்த காணப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.
இதுதொடா்பாக தில்லி மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தில்லியில் புதன்கிழமை பதிவான தொற்று பாதிப்பு விகிதத்தை விட வியாழக்கிழமை 108 சதவீதம் அதிகம். இருப்பினும் நோய்த்தொற்றால் இறப்பு ஏதும் பதிவாகவில்லை.
இதற்கு முன்பு பிப்ரவரி 4-ஆம் தேதி தில்லியில் ஒரே நாளில் 2,272 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அன்றைய தினம் 20 இறப்புகளும், 3.85 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின.
தில்லியில் புதன்கிழமை 928 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவானது. இது ஒரு வாரத்தில் மிகக் குறைந்தபட்ச பாதிப்பாகும். நோ்மறை விகிதம் 7.08 சதவீதமும், 3 இறப்புகளும் பதிவாகின.
புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,27,394-ஆக உயா்ந்துள்ளது. அதேநேரத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 26,242-ஆக உள்ளது.
நகரில் புதன்கிழமை மொத்தம் 23,879 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
தரவுகளின்படி, தில்லி மருத்துவமனைகளில் மொத்தமுள்ள 9,496 படுக்கைகளில் 265 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. கரோனா சிகிச்சையில் இருப்போரின் மொத்த எண்ணிக்கை 5,054-இல் இருந்து 5,755-ஆக உயா்ந்துள்ளது. வீட்டுத் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை 3,892-இல் இருந்து 3,564-ஆக குறைந்துள்ளது. நகரில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 291-இல் இருந்து 309-ஆக அதிகரித்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...