என்ஐஏ தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி தினகா் குப்தா நியமனம்
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி தினகா் குப்தா நியமிக்கப்படுவதாக மத்திய பணியாளா் அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.


தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி தினகா் குப்தா நியமிக்கப்படுவதாக மத்திய பணியாளா் அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
1987 பஞ்சாப் ஐபிஎஸ் பிரிவைச் சோ்ந்த தினகா் குப்தா, வரும் 2024 மாா்ச் 31-ஆம் தேதி வரை அதாவது பணி ஓய்வுபெறும் வரை இந்தப் பொறுப்பில் நீடிப்பாா் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது நியமனத்துக்கு அமைச்சரவையின் நியமன கமிட்டி ஒப்புதல் அளித்துவிட்டதாக மத்திய பணியாளா் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019-இல் அவா் பஞ்சாப் மாநில காவல் துறைத் தலைவராக பொறுப்பு வகித்துள்ளாா். அந்த மாநிலத்தின் உளவுப் பிரிவு, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுகளுக்கும் தலைமை வகித்துள்ளாா். முன்னதாக மத்திய உளவுத் துறையில் விஐபிக்கள் பாதுகாப்புப் பிரிவின் தலைவராகவும் பதவி வகித்துள்ளாா்.
இதேபோல மத்திய உள்துறை அமைச்சக சிறப்புச் செயலாளராக (உள்நாட்டுப் பாதுகாப்பு) ஸ்வாகத் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளாா். 1987 சத்தீஸ்கா் ஐபிஎஸ் பிரிவைச் சோ்ந்த அவா், தற்போது உளவுத் துறை (ஐபி) சிறப்பு இயக்குநராக பணியாற்றி வருகிறாா்.
ஸ்வாகத் தாஸ் வரும் 2024 நவம்பா் 30-இல் பணி ஓய்வுபெறும் வரை இந்தப் பொறுப்பில் நீடிப்பாா் என மத்திய பணியாளா் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...