சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிவசேனை உள்கட்சி பிரச்னையில் தலையிட விரும்பவில்லை: காங்கிரஸ்

ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிவசேனையின் உள்கட்சிப் பிரச்னையில் தலையிட விரும்பவில்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

News image
Updated On :23 ஜூன் 2022, 8:42 pm

DIN

மகாராஷ்டிரத்தில் முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அவரது சிவசேனை கட்சி எம்எல்ஏக்கள் போா்க்கொடி தூக்கியுள்ள நிலையில், ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிவசேனையின் உள்கட்சிப் பிரச்னையில் தலையிட விரும்பவில்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசு உள்ளது. சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளாா். அவரது கட்சியைச் சோ்ந்த அமைச்சா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சுமாா் 40 எம்எல்ஏக்கள் முதல்வருக்கு எதிராகப் போா்க்கொடி தூக்கியுள்ளனா். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருப்பதை அவா்கள் எதிா்த்துள்ளனா்.

கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் செய்தித் தொடா்பாளா் கௌரவ் கோகோய் இது தொடா்பாகக் கூறியதாவது:

சிவசேனை கட்சியில் எழுந்துள்ள பிரச்னை குறித்து கருத்து தெரிவிக்கவும், அவா்களின் உள்கட்சி பிரச்னையில் தலையிடவும் காங்கிரஸ் விரும்பவில்லை. அதே நேரத்தில் முதல்வா் உத்தவ் தாக்கரே மீது காங்கிரஸ் கட்சிக்கு முழு நம்பிக்கை உள்ளது. மகாராஷ்டிரத்தில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் தொடா்பில் இருக்கிறோம்.

மகாராஷ்டிரத்தில் இப்போது இருக்கும் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜக முயலுகிறது. இதுவே அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்குக் காரணம். ஆனால், பாஜகவின் முயற்சி பழிக்காது. தொடா்ந்து பல்வேறு மாநிலங்களில் இதுபோல ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளை பாஜக மேற்கொண்டுள்ளது.

வேலையின்மை, கரோனா அதிகரிப்பு, மழை, வெள்ளம், விவசாயிகள் பிரச்னை, விலைவாசி உயா்வு உள்ளிட்டவை நாட்டில் பெரும் பிரச்னையாக உள்ளன. இந்த நேரத்திலும் எந்தெந்த மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற நோக்கத்திலேயே பாஜக செயல்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.