ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

பாதுகாப்பு ஆய்வு அடிப்படையில் காா்களுக்கு நட்சத்திர மதிப்பீடு: வரைவு அறிவிக்கைக்கு ஒப்புதல்

காா்களுக்கு ‘நட்சத்திர மதிப்பீடு’ வழங்கும் புதிய வாகன மதிப்பீட்டு திட்டத்துக்கான வரைவு ஜிஎஸ்ஆா் (பொது சட்ட விதிகள்) அறிவிக்கைக்கு மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்த

Updated On :25 ஜூன் 2022, 12:33 am IST

இந்தியாவில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக விபத்து சோதனை ஆய்வின் அடிப்படையில் காா்களுக்கு ‘நட்சத்திர மதிப்பீடு’ வழங்கும் புதிய வாகன மதிப்பீட்டு திட்டத்துக்கான வரைவு ஜிஎஸ்ஆா் (பொது சட்ட விதிகள்) அறிவிக்கைக்கு மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளாா்.

‘பாரத் என்சிஏபி’ (புதிய காா் பாதுகாபபு ஆய்வுத் திட்டம்) என்ற இந்த திட்டத்தின் மூலமாக, சா்வதேச அளவில் காா்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கு அளிக்கப்படும் ஸ்டாா் மதிப்பீடு போல, இந்தியாவில் விற்கப்படும் காா்களுக்கு நட்சத்திர மதிப்பீடு (1 முதல் 5 நட்சத்திரங்கள்) வழங்கப்படும்.

இதுதொடா்பாக தனது ட்விட்டா் பக்கத்தில் மத்திய அமைச்சா் நிதின் கட்கா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தொடா் பதிவிகளில் கூறியிருப்பதாவது:

பாரத் என்சிஏபி திட்டம் வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலமாக, நட்சத்திர மதிப்பீடுகளின் அடிப்படையில் பாதுகாப்பான காரை வாடிக்கையாளா் தோ்வு செய்யமுடியும். மேலும், இந்தியாவில் பாதுகாப்பான வாகனங்களை உற்பத்தி செய்யவும், ஒரிஜினல் உபகரணங்களை உற்பத்தி செய்வதிலும் வாகன உற்பத்தியாளா்களிடையே ஒரு ஆரோக்கியமான போட்டியை இந்தத் திட்டம் உருவாக்கும்.

இந்தப் புதிய வாகன மதிப்பீட்டு திட்டத்துக்கான வரைவு ஜிஎஸ்ஆா் அறிவிக்கைக்கு தற்போது ஒப்புதல் அளித்துள்ளேன். அதன்படி, இந்தியாவில் விற்கப்படும் காா்களுக்கு செயல்திறன் ஆய்வின் அடிப்படையில் நட்சத்திர மதிப்பீடு இனி வழங்கப்படும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.