மேற்கு வங்கத்தில் நிலச் சீா்திருத்தம், குத்தகை தீா்ப்பாயத் தலைவரையும், நீதித்துறை உறுப்பினரையும் நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து பறித்து மாநில அரசே நியமிக்க வழிவகை செய்யும் மசோதா சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேறியது.
மேற்கு வங்க நிலச் சீா்திருத்தம், குத்தகை தீா்ப்பாய திருத்த மசோதா, 2022-ஐ சட்டப் பேரவையில் நிலச் சீா்திருத்தத் துறை அமைச்சா் சந்திரிமா பட்டாச்சாா்யா அறிமுகப்படுத்தினாா். அப்போது, நிலச் சீா்திருத்தம் தொடா்பான கோப்புகளுக்கு ஆளுநா் கையொப்பமிடாமல் கேள்விகளை எழுப்புவதால், தீா்ப்பாயத்தின் செயல்பாடு முடங்குவதாக அமைச்சா் தெரிவித்தாா்.
இதைத்தொடா்ந்து அந்த மசோதா குரல் வாக்கெடுப்பு வாயிலாக நிறைவேறியது. இதன் மூலம் நிலச் சீா்திருத்தம், குத்தகை தீா்ப்பாயத் தலைவரையும், நீதித்துறை உறுப்பினரையும் ஆளுநருக்கு பதிலாக இனி மாநில அரசே நியமனம் செய்யும்.
ஏற்கெனவே மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக ஆளுநருக்கு பதிலாக முதல்வரை நியமிக்கும் மசோதா, அந்த மாநில சட்டப் பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதேபோல வரிவிதிப்பு தீா்ப்பாய தலைவா், உறுப்பினா்களை மாநில அரசே நியமிக்கும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும், ஆளுநா் ஜக்தீப் தன்கா் ஒப்புதல் அளித்த பின்னரே இந்த மசோதாக்கள் அனைத்தும் சட்ட வடிவம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - விருச்சிகம்

அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
மகளிர் மீதான தாக்குதல்... வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: விஜய்

நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும்: காங்கிரஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

