மகாராஷ்டிரத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில், மகாராஷ்டிர பேரவை துணைத் தலைவர், சட்டப்பேரவை செயலாளர், சட்டப்பேரவைக் குழுத் தலைவர் உள்ளிட்டோர் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சிவசேனை எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையில், சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி அக்கட்சி சாா்பில் பேரவை துணைத் தலைவரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. இந்தக் கடிதம் தொடா்பாக திங்கள்கிழமைக்குள் (ஜூன் 27) எழுத்துபூா்வமாகப் பதிலளிக்குமாறு 16 அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவைச் செயலகம் சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
இதனை எதிர்த்து அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் தரப்பு மனுவில், மகராஷ்டிரத்தில் சிவேசேனை தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவு திரும்பப் பெறப்படுவதாகவும் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கில், தகுதி நீக்க நோட்டீஸ் குறித்து மகாராஷ்டிர பேரவை துணைத் தலைவர், சட்டப்பேரவை செயலாளர், சட்டப்பேரவைக் குழுத் தலைவர் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜூலை 11 ஆம் தேதி வரை அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் கூறியுள்ளது.
இதையும் படிக்க | மகாராஷ்டிர அரசுக்கான ஆதரவு வாபஸ்: அதிருப்தி எம்எல்ஏக்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

