பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் தனிச் செயலா் பி.பி. மாதவன் (71) மீது தில்லி காவல்துறையினர் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இதுகுறித்து காவல்துறையினர் மேலும் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு (26) வேலை வாங்கித் தருவதாகவும், அவரைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி, பி.பி. மாதவன் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். மேலும், இதை வெளியில் தெரிவித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவரை மிரட்டியுள்ளாா்’ என்றனா்.
இதுகுறித்து அந்தப் பெண் தில்லி உத்தம் நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை), 506 (கிரிமினல் அச்சுறுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருவதாக துவாரகா காவல் துணை ஆணையா் ஹா்ஷவா்தன் தெரிவித்துள்ளார்.
தில்லி காங்கிரஸ் அலுவலகத்தில் பேனர்கள் கட்டுவது போன்ற வேலைகளைச் செய்துவந்த தன்னுடைய கணவர், 2020-ல் இறந்துவிட்ட நிலையில், வேலை தேடி மாதவனை அணுகியதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
முதலில் நேர்காணலுக்கு அழைத்த அவர், பின்னர், விடியோ அழைப்பில் பேசியதுடன், வாட்ஸ்ஆப் மூலமும் செய்திகளைப் பரிமாறிக் கொண்டதாகவும் கூறியுள்ள அந்தப் பெண், உத்தம்நகர் மெட்ரோ நிலையத்துக்கு அருகே ஓரிடத்துக்கும் சுந்தர்நகரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்கும் அழைத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது திட்டமிட்ட சதி என்றும் அடிப்படையற்றது என்றும் மாதவன் தரப்பில் மறுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; மௌனம் காக்கும் திமுக! - தமிழிசை விமர்சனம்

உலகின் மிகப்பெரிய LPG ஆலை மீது Iran தாக்குதல்! | Israel | US

போடிநாயக்கனூர்: திமுக சார்பில் போட்டியிடுகிறாரா ஓபிஎஸ்?

சந்தேகத்தால் தகராறு: கணவர் மீது அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற மனைவி!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

