மும்பை கட்டட விபத்தில் பலி 10 ஆக உயர்வு! தொடரும் மீட்புப்பணி
மும்பையில் அடுக்குமாடிக் கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.


மும்பையில் அடுக்குமாடிக் கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் குர்லா அருகே நாயக் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் நள்ளிரவில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்று காலை இருவர் உயிரிழந்ததாகவும் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. உயிருடன் மீட்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 13 பேர். இன்னும் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்கிறது.
இதையும் படிக்க | மும்பையில் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி

காயமடைந்தவர்கள் அனைவரும் கட்கோபர் மற்றும் சியான் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாவும் மும்பை ஆணையர் இக்பால் சிங் தெரிவித்துள்ளார்.

முன்னதாக விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாநில அரசு சார்பில் ரூ. 5 லட்சம் நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சையும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மும்பை கட்டட விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...