நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,73,717 பரிசோதனைகள்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,73,717 பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,73,717 பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
புதிதாக 11,793 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 27 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 5,25,047 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 9,486 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,27,97,092 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி இன்னும் 96,700 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பில் 0.22 சதவிகிதம். தேசிய அளவில் குணமடைவோர் விகிதம் 98.57 ஆக உள்ளது. .
தினசரி தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 2.49 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது. வாராந்திர விகிதம் 3.36 சதவிகிதம்.
கடந்த 24 மணி நேரத்தில் 4,73,717 பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில் மொத்தம் இதுவரை 86.14 கோடி பரிசோதனை மேற்கொண்டுள்ளது.
அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நாட்டில் இதுவரை மொத்தம் 197.31 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...