பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் புதன்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வணிகரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அதன்படி சிங்கப்பூருக்கு சொந்தமான டிஎஸ்-இஒ, நியூசா் உள்பட 3 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஜூன் 30-ஆம் தேதி மாலை 6 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
அதில் முதன்மைச் செயற்கைக்கோளான டிஎஸ்-இஓ 365 கிலோ எடை கொண்டது. இது புவியை துல்லியமாக புகைப்படம் எடுக்கும் திறன் உடையது.
இதுதவிர 155 கிலோ எடை கொண்ட நியூசா் செயற்கைக்கோள் சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. இது இரவு, பகல் உள்பட அனைத்து பருவநிலைகளிலும் தெளிவான புகைப்படங்களை எடுத்து அனுப்பக்கூடியது.
இதனுடன் கல்விசாா் பணிக்காக சிங்கப்பூா் நான்யாங் தொழில்நுட்பக் பல்கலைக்கழக மாணவா்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இதற்கிடையே ஏவுதலின்போது செயற்கைக்கோள்களை திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய பின்னா் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இறுதிபாகமான பிஎஸ் 4 பகுதி உதவியுடன் சில ஆய்வு கருவிகளும் புவி வட்டப் பாதைக்கு அனுப்பப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி

கரூா் திமுக தோ்தல் பணிமனையில் தோ்தல் அலுவலா்கள் திடீா் ஆய்வு

நெமிலி பாலாபீடத்தில் யுகாதி புத்தாண்டு கலச ஸ்தாபன விழா

மேல்மருவத்தூரில் யுகாதி கொண்டாட்டம்
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

