நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உக்ரைனிலிருந்து திரும்பும் மாணவர்களுக்கு தங்குமிடம், உணவு வழங்கப்படும்: ம.பி. முதல்வர்

உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பும் மாணவர்களுக்குத் தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய மாநில அதிகாரிகளுக்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் உத்தரவிட்டுள்ளார்.

News image
Updated On :2 மார்ச் 2022, 11:43 am

DIN

போர் பதற்றம் நிறைந்த உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பும் மாணவர்களுக்குத் தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய மாநில அதிகாரிகளுக்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக அரசு அதிகாரி கூறுகையில்,

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் 180-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதுவரை மத்தியப் பிரதேச முதல்வர் அமைத்த ஹெல்ப்லைனைத் தொடர்பு கொண்டுள்ளதாக மாநில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதுவரை மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 29 பேர் உக்ரைனிலிருந்து திரும்பியுள்ளனர். மாணவர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு அவர்கள் தங்குமிடம், உணவு மற்றும் அவர்களின் வீடுகளுக்குச் செல்ல போக்குவரத்து போன்ற ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்ய வேண்டும். மாணவர்கள் எந்த பிரச்னைனையும் சந்திக்கக் கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

மேலும், ஓரிரு நாட்களில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அதிகமான மாணவர்கள் தில்லி மற்றும் மும்பைக்கு விமானங்கள் மூலம் உக்ரைனிலிருந்து இந்தியாவுக்கு வர உள்ளனர். 

ம.பி அரசு வெளி விவகார அமைச்சக அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்து வருகிறது. அவர்கள் உக்ரைன் தூதரக அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு அங்குள்ள மாணவர்களை நல்வாழ்வு குறித்துத் தெரிவித்து வருகின்றனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.