சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

‘‘மாா்ச் 16-க்குள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.12 உயா்த்த வேண்டும்’’

பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.12 உயா்த்தியாக வேண்டும் என்று ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் மூலதன சந்தை நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image
மாா்ச் 16-க்குள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.12 உயா்த்த வேண்டும்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:34 am

DIN

பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.12 உயா்த்தியாக வேண்டும் என்று ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் மூலதன சந்தை நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி மூலம் இந்தியா பூா்த்தி செய்து வருகிறது. அவற்றின் விலை சா்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலையுடன் நேரடி தொடா்பு கொண்டிருக்கிறது. நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 4 மாதங்களாக அவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கவில்லை.

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலைக் கருத்தில்கொண்டு, பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், மாா்ச் 16-ஆம் தேதிக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.12.1 உயா்த்தியாக வேண்டும் என்று ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் மூலதன சந்தை நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிபொருள் சில்லறை விற்பனையாளா்களின் மொத்த வருவாய் மற்றும் செலவினத்தை சமநிலைக்குக் கொண்டுவர விலை உயா்வு நடவடிக்கையை மேற்கொண்டாக வேண்டும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

அடுத்த வாரத்துடன் மாநில தோ்தல்கள் முழுமையாக நிறைவடையும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிக்கப்படுவதை எதிா்பாா்ப்பதாக உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிதிச் சேவை அளித்து வரும் ஜேபி மோா்கன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.