சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மணிப்பூர் 2-ம் கட்ட தேர்தல்: 5 மணி நிலவரப்படி 76.62% வாக்குப் பதிவு

மணிப்பூர் இரண்டாம் கட்ட தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 76.62 சதவிகித வாக்குகள் பதிவானதாக மணிப்பூர் தலைமைத் தேர்தல் அலுவலர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :5 மார்ச் 2022, 4:43 pm

DIN


மணிப்பூர் இரண்டாம் கட்ட தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 76.62 சதவிகித வாக்குகள் பதிவானதாக மணிப்பூர் தலைமைத் தேர்தல் அலுவலர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 28-ம் தேதி நடைபெற்றது. இரண்டாவது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

வாக்குப் பதிவு குறித்து அந்த மணிப்பூர் தலைமைத் தேர்தல் அலுவலர் ராஜேஷ் அகர்வால் கூறியதாவது:

"மணிப்பூர் இரண்டாம் கட்ட (இறுதிக் கட்ட) வாக்குப் பதிவு பெரிதளவில் அமைதியாக நடைபெற்றது. மாலை 5 மணி வரை 76.62% வாக்குகள் பதிவாகியுள்ளன. 85% வாக்குகள் பதிவாகியிருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

பெரிதளவில் தேர்தல் வன்முறை எதுவும் நிகழவில்லை. மலைகளில் 12 வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டன. வாக்குப் பதிவு இயந்திரங்களில் தரவுகள் சேகரிக்கப்படாமல் இருந்தால் மறுவாக்குப் பதிவு நடத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அரசியல் கட்சிகளிடமிருந்தும் புகார்கள் வந்துள்ளன. அவை குறித்தும் ஆய்வு நடத்தப்படும்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.