கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உக்ரைனிலிருந்து 92 ஜார்க்கண்ட் மாணவர்கள் தாயகம் திரும்பினர்

உக்ரைனிலிருந்து இதுவரை 92 ஜார்க்கண்ட் மாணவர்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியுள்ளனர். 

News image
Updated On :5 மார்ச் 2022, 12:29 pm

DIN

உக்ரைனிலிருந்து இதுவரை 92 ஜார்க்கண்ட் மாணவர்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியுள்ளனர். 

சொந்த ஊருக்குத் திரும்பிய மாணவர்களில் சிலரை முதல்வர் ஹேமந்த் சோரன் சந்தித்து நலம் விசாரித்தார்.

மேலும் அவர் கூறியதாவது, 

எட்டு ஜார்க்கண்ட் மாணவர்கள் சனிக்கிழமை ராஞ்சியின் பிர்சா முண்டா விமான நிலையத்தில் தரையிறங்கினர். இன்று மாலைக்குள் மேலும் சில மாணவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

உக்ரைனிலிருந்து இதுவரை 92 பேர் மாநிலத்திற்கு வந்துள்ளனர் என்று கட்டுப்பாட்டு அறை தலைவர் ஜான்சன் டோப்னோ தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை வரை உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் 184 ஜார்கண்ட் மாணவர்களைக் கட்டுப்பாட்டு அறை கண்டுபிடித்ததாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்துள்ளது.

உக்ரைனிலிருந்து மாநிலத்திற்கு வருபவர்களின் விமானக் கட்டணம் திருப்பித் தரப்படும் என்றும் சோரன் அறிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.