ரத்த மாதிரிகளைக் கொண்டு வர டிரோன்கள்: தனியார் பரிசோதனை மையம் அசத்தல் ஐடியா

நொய்டாவில் உள்ள தனியார் பரிசோதனை மையம் ஒன்று, மீரட்டிலிருந்து நொய்டாவுக்கு ரத்த மாதிரிகளை எடுத்து வர டிரோன்களைப் பயன்படுத்தும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மீரட்: நொய்டாவில் உள்ள தனியார் பரிசோதனை மையம் ஒன்று, மீரட்டிலிருந்து நொய்டாவுக்கு ரத்த மாதிரிகளை எடுத்து வர டிரோன்களைப் பயன்படுத்தும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம், சாலை வழியாக வர 2 - 3 மணி நேரம் ஆகும் நிலையில், டிரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்துக்குள் ரத்த மாதிரிகள் வந்து சேர்வதாகக் கூறப்படுகிறது.

பரிசோதனை முறையில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், இது வெற்றி பெற்றால், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு- காஷ்மீர் போன்ற மலை மற்றும் போக்குவரத்து வசதியில்லாத பகுதிகளிலிருந்து ரத்த மாதிரிகளைக் கொண்டு வர இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முதல் முயற்சியாக, வியாழக்கிழமையன்று, மீரட்டிலிருந்து நொய்டாவுக்கு ரத்த மாதிரிகள் சுமார் 73 கிலோ மீட்டர் தொலைவுக்கு டிரோன்கள் மூலம் கொண்டு வரப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com