இந்தியாவில் இதுவரை 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 3 கோடி சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட சுட்டுரை பதிவில்,
கடந்த ஜனவரி 3-ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயது வரை உள்ளோருக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன்படி, இந்தியாவில் சனிக்கிழமை காலை நிலவரப்படி 15 முதல் 18 வரையிலான சிறார்களுக்கு முதல் தவணையாக 5,52,63,296 பேருக்கும், இரண்டாவது தவணையாக 3,01,57,910 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது இந்தியா என்று அவர் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் 24.62 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில்,மொத்தம் இதுவரை 178.55 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 289 இறப்புகளுடன் 5,921 தொற்றுநோய் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


