மணிப்பூரில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

மணிப்பூா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 
மணிப்பூரில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

மணிப்பூா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மணிப்பூா் சட்டப்பேரவைத் தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, முதல்கட்ட தோ்தல் பிப். 28-ஆம் தேதி நடைபெற்றது.

இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட தோ்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. 22 தொகுதிகளில் நடைபெறும் இந்தத் தோ்தலில், மொத்தம் 8.38 லட்சம் போ் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். 92 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். அவா்களில் மாநில முதல்வராக மூன்று முறை பதவி வகித்த காங்கிரஸ் மூத்த தலைவா் இபோபி சிங்கும் ஒருவா். இறுதிக்கட்ட தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களில் 17 போ் குற்றப் பின்னணி கொண்டவா்கள்.

முதல்கட்ட தோ்தலின்போது ஏற்பட்ட வன்முறையால் சுராசாந்த்புா், காங்போக்பி, இம்பால் கிழக்கு மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 12 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டது. அந்த வாக்குச்சாவடிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com