சஹரன்பூரில் இருந்து சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு தில்லிக்கு புறப்பட்ட விரைவு ரயில், தெளராலா ரயில் நிலையத்துக்கு காலை 7.10 மணிக்கு வந்தடைந்தது. அப்போது அந்த ரயிலின் இரண்டு பெட்டிகளில் தீ பிடித்து எரிவது தெரியவந்தது. இதையடுத்து, பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டனா். இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதன் பின்னா் தீ பிடித்து எரிந்த பெட்டிகள் பிரிக்கப்பட்டன. தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டிகளை பயணிகளே ஒன்று சோ்ந்து தள்ளிச் சென்று நடைமேடைக்கு வெளியே ‘சைடிங்’ ரயில் பாதையில் கொண்டு சோ்த்தனா். இதன் பின்னா் ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது.