ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மம்தாவின் விமானத்தை நோக்கி வந்த மற்றொரு விமானம்

தனது விமானத்திற்கு எதிரே மற்றொரு விமானம் மோதும் வகையில் பறந்துவந்ததாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புகார் தெரிவித்துள்ளார். 

News image

மம்தா பானர்ஜி (கோப்புப் படம்)

Updated On :7 மார்ச் 2022, 4:05 pm

DIN

தனது விமானத்திற்கு எதிரே மற்றொரு விமானம் மோதும் வகையில் பறந்துவந்ததாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புகார் தெரிவித்துள்ளார். 

விமானியில் சாதூர்யமான நடவடிக்கையால் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எனது விமானம் பறந்துகொண்டிருந்தபோது எந்தவித முன்னறிவிப்புமின்றி மற்றொரு விமானம் எதிரே பறந்து வந்தது. இதனால் எனது விமானம் 8 ஆயிரம் அடி கீழே இறங்கியது.

விமானியின் நேர்த்தியால் விமான விபத்து தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடமிருந்தோ, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டிலிருந்தோ எந்தவித அறிவிப்பையும் இதுவரை பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.