மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புது தில்லியில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்
மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்
Updated on
1 min read


புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புது தில்லியில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதல் மற்றும் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை, அண்டை நாடுகள் வழியாக மீட்கும் பணி நடைபெற்று வருவது குறித்து இந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இதுவரை 17,400 இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com