உத்தரப் பிரதேச மாநிலத்தில் தந்தையின் வன்கொடுமையால் 6 வயது சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குடகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தந்தை தனது 6 வயது மகளுடன் தனியாக வீட்டில் இருந்துள்ளார்.
சிறுமியின் தாயார் உறவினரைச் சந்திப்பதற்காக வெளியூர் சென்றிருந்தாதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் தந்தை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அச்சமடைந்த சிறுமி அழுதுகொண்டு வீட்டிலிருந்து வெளியே ஓடியதால், தந்தை கடுமையாக தாக்கியதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 5ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தைத் தொடர்ந்ந்து சிறுமி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


