கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பஞ்சாப்பின் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் வீட்டில் தயாராகும் ஜிலேபிகள்

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறியப்படும் பக்வந்த் மன், தேர்தல் முடிவுகள் தெரியவரும் முன்பே, தனது வீட்டில் பெரிய அளவில் கொண்டாட்டங்களை நடத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்யத்

News image
பஞ்சாப்பின் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் வீட்டில் தயாராகும் ஜிலேபிகள்
Updated On :10 மார்ச் 2022, 5:00 am

DIN


பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறியப்படும் பக்வந்த் மன், தேர்தல் முடிவுகள் உறுதியாக வெளியாகும் முன்பே, தனது வீட்டில் பெரிய அளவில் கொண்டாட்டங்களை நடத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்யத் தொடங்கிவிட்டார்.

பக்வந்த் மன் வீட்டில் தற்போது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. மற்றொரு பக்கம் இனிப்புகள் தயாரிக்கும் பணியும் தொடங்கிவிட்டது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து, அவர் வெற்றிக் கொண்டாட்டங்களுக்குத் தயாராகிவிட்டார்.

சங்ரூரில் உள்ள தனது இல்லத்தில் ஆட்களை வைத்து ஜிலேபி சுடும் வேலையைத் தொடங்கிவிட்டிருந்தார். பெரிய பெரிய பாத்திரங்களில் ஏராளமான ஜிலேபிகள் செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நேற்றைய தினமே தயாராகிவிட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி 10 மணி நிலவரப்படி, பஞ்சாப்பில் 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.