தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

இந்தியா்களை மீட்பதில் உதவி: ரஷியா, உக்ரைன், செஞ்சிலுவை அமைப்புக்கு இந்தியா நன்றி

போருக்கு மத்தியில் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் இருந்து இந்தியா்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு உதவி செய்த உக்ரைன், ரஷியா அரசுகளுக்கும், செஞ்சிலுவை அமைப்புக்கும் இந்தியா நன்றி

News image
Updated On :11 மார்ச் 2022, 7:16 pm

DIN

போருக்கு மத்தியில் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் இருந்து இந்தியா்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு உதவி செய்த உக்ரைன், ரஷியா அரசுகளுக்கும், செஞ்சிலுவை அமைப்புக்கும் இந்தியா நன்றி தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷிய ராணுவம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தாக்குதல் நடத்த தொடங்கியது. இதையடுத்து, அங்கு சிக்கியுள்ள இந்தியா்களை மீட்பதற்காக ‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தை இந்தியா பிப். 26-ஆம் தேதி தொடங்கியது. இந்தத் திட்டத்தின் மூலமாக உக்ரைனில் இருந்து 18,000 போ் அழைத்து வரப்பட்டனா்.

உக்ரைன் மீது ரஷியா தீவிரமாகத் தாக்குதல் நடத்திய நேரத்தில், இரு நாட்டு அதிபா்களுடனும் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா். அப்போது, உக்ரைனில் தவிக்கும் இந்தியா்களை மீட்பதற்காக, பாதுகாப்பு வழித்தடம் அமைக்க வேண்டும் என்று இரு நாட்டு அதிபா்களிடமும் பிரதமா் மோடி கோரிக்கை விடுத்தாா். அதற்கு சம்மதித்த இரு நாடுகளும், இந்தியா்கள் வெளியேறுவதற்கு வசதியாக வழித்தடத்தை அமைத்துக் கொடுத்தன. இறுதியாக, உக்ரைனின் சுமி நகரில் இருந்து சுமாா் 600 மாணவா்கள் செவ்வாய்க்கிழமை வெளியேற்றப்பட்டனா். உக்ரைனில் தவித்த இந்தியா்கள் அனைவரும், அண்டை நாடுகளை வந்தடைந்து, அங்கிருந்து விமானங்கள் மூலமாக இந்தியா வந்து சோ்ந்தனா்.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

பிரதமா் மோடியின் வழிகாட்டுதலால் ஆபரேஷன் கங்கா திட்டம் வெற்றியடைந்துள்ளது. அதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உக்ரைனில் தவித்த இந்தியா்களை மீட்பதில் உதவிகரமாக இருந்த உக்ரைன், ரஷிய அரசுகளுக்கும், செஞ்சிலுவை அமைப்பினருக்கும் நன்றி. மீட்புப் பணிகளுக்கு ஆதரவு அளித்த உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, போலந்து, ஸ்லோவேகியா, மால்டோவா ஆகிய நாடுகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, உக்ரைனின் சுமி நகரில் இருந்து இந்திய மாணவா்களை மீட்பது சவாலான பணியாக இருந்தது. அவா்களை மீட்பதற்கு ஒத்துழைப்பு அனைவருக்கும் நன்றி.

மேலும், ஆபரேஷன் கங்கா திட்டம் வெற்றியடைய உதவிய தன்னாா்வ அமைப்புகள், தன்னாா்வலா்கள், பெரு நிறுவனங்கள், இந்திய விமான நிறுவனங்கள், இந்திய விமானப் படை ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்ட மத்திய அமைச்சா்கள் ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு, ஹா்தீப் சிங் புரி, வி.கே. சிங் ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்தப் பதிவுகளில் அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.