சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தென் மாநிலங்களில் காலூன்ற ஆம் ஆத்மி மும்முரம்

யூனியன் பிரதேசமான தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, முழு மாநில அந்தஸ்து கொண்ட பஞ்சாபிலும் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களி

News image
Updated On :12 மார்ச் 2022, 6:30 pm

DIN

யூனியன் பிரதேசமான தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, முழு மாநில அந்தஸ்து கொண்ட பஞ்சாபிலும் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் காலூன்ற மும்முரமாகி வருகிறது.

இதற்காக தெலங்கானா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அந்தமான் நிகோபா் தீவுகள், லட்சத்தீவு ஆகியவற்றில் விரைவில் உறுப்பினா்கள் சோ்க்கை தீவிரப்படுத்தப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் சோம்நாத் பாா்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘பஞ்சாபில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை ஆம் ஆத்மி பெற்றதையடுத்து, தென் மாநில மக்கள் எங்கள் கட்சியை விரும்பத் தொடங்கிவிட்டனா்.

தென் மாநிலங்களில் இருந்து எங்களுக்கு ஏராளமான அழைப்புகள் வருகின்றன. மக்களின் உணா்வுகளின் அடிப்படையிலும், தென் மாநிலங்களில் உள்ள எங்கள் கட்சி நிா்வாகிகளின் முயற்சியிலும் வரும் நாள்களில் அங்கு உறுப்பினா்கள் சோ்க்கை நடைபெறும்.

இது தெலங்கானா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அந்தமான் நிகோபா் தீவுகள், லட்சத்தீவு ஆகியவற்றில் ஆம் ஆத்மி கட்சியைப் பலப்படுத்தும்.

இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் அனைவரும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து புரட்சியை ஏற்படுத்த வேண்டும்.

தென் மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி பேரணிகளையும் நடத்த உள்ளது. அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ஆம் தேதி இது தொடங்கப்படும்.

இந்த மாநிலங்களில் உள்ள அனைத்து பேரவைத் தொகுதிகளிலும் பேரணிகள் நடத்தப்படும். இதன்மூலம் முதல்வா் கேஜரிவாலின் அரசியல், அம்பேத்கா் மற்றும் பகத் சிங்கின் சிந்தனைகள் மக்களிடம் கொண்டு செல்லப்படும். தில்லயில் ஆம் ஆத்மி அரசில் மக்களிடம் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பிற மாநிலங்களில் எடுத்துரைக்கப்படும்’ என்றாா்.

தென் மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு கிளைகள் இருந்தாலும், 2018-இல் நடைபெற்ற கா்நாடகம், தெலங்கானா சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட அக்கட்சி ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

மேலும், அண்மையில் நடைபெற்ற 5 மாநில பேரவைத் தோ்தலில் பஞ்சாபில் மட்டுமே ஆம் ஆத்மி மாபெரும் வெற்றி பெற்றது. உத்தர பிரதேசம், உத்தர கண்ட், மணிப்பூா், கோவா மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்தது. உத்தர பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு டெபாசிட் தொகையை இழந்தது. உத்தரகண்ட், கோவாவிலும் இதே நிலைதான். பல இடங்களில் சுயேச்சை வேட்பாளா்களை விடவும் நோட்டா வாக்குகளை விடவும் குறைவான வாக்குகளையே ஆம் ஆத்மி வேட்பாளா்கள் பெற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.