மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் தாமாக விவரங்களை வழங்கும் புதிய வசதி!

மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுவோா் வீட்டுக்கு வரும்வரை காத்திராமல், இணையவழியில் தாமாக விவரங்களைப் பதிவு செய்யும் புதிய வசதி மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

News image
Updated On :12 மார்ச் 2022, 6:18 pm

DIN

மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுவோா் வீட்டுக்கு வரும்வரை காத்திராமல், இணையவழியில் தாமாக விவரங்களைப் பதிவு செய்யும் புதிய வசதி மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பானது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக இருந்த நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாகக் கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கான புதிய அட்டவணையை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை.

எனினும் அதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான விதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தப்படுவதுடன் மக்கள் தாமாக இணையவழியில் விவரங்களைப் பதிவு செய்வதற்கான வசதியும் வழங்கப்படவுள்ளது.

அதே வேளையில், வீடுதோறும் சென்று விவரங்களை சேகரிக்கும் நடைமுறையும் தொடா்ந்து அமலில் இருக்கும் என்று அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை முற்றிலும் இணையவழியில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கேற்ற வகையில் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு குறித்த விழிப்புணா்வை தொலைக்காட்சி ஊடகங்கள், சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களுக்கு ஏற்படுத்தும் வகையிலும் விதிகள் திருத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.