மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

குஜராத் காந்தி நகரில் பிரதமர் மோடி சாலைப் பேரணி; தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

குஜராத் மாநிலம் காந்திநகரில் பிரதமர் நரேந்திர மோடி சாலைப் பேரணியில் ஈடுபட்டார்.

News image
Updated On :12 மார்ச் 2022, 6:54 am

DIN

குஜராத் மாநிலம் காந்திநகரில் பிரதமர் நரேந்திர மோடி சாலைப் பேரணியில் ஈடுபட்டார்.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாப் தவிர்த்து உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூா், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இதையடுத்து இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாகவும், குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதையடுத்தும் இரண்டு நாள் பயணமாக பிரதமா் மோடி குஜராத் வந்துள்ளாா். 

நேற்று குஜராத் வந்தடைந்த அவர், காந்திநகா் விமான நிலையத்தில் இருந்து பாஜக மாநிலத் தலைமையகமான கமலத்துக்கு மலா்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் அவா் பயணம் செய்தாா். அவருக்கு வழிநெடுகளிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

தொடர்ந்து இன்றும் தலைநகர் காந்திநகரில் அவர் சாலைப் பேரணியில் ஈடுபட்டார். சாலையின் இரு புறமும் பாஜக தொண்டா்களும், பொதுமக்களும் திரண்டு நின்று பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தல் குறித்தும் மாநில நிா்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.