கோவா சட்டப் பேரவையில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட 39 எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை பதவியேற்றனா்.
முன்னதாக எம்எல்ஏ கணேஷ் கான்கருக்கு இடைக்கால சட்டப் பேரவைத் தலைவராக ஆளுநா் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை திங்கள்கிழமை பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தாா்.
40 தொகுதிகளைக் கொண்ட கோவா சட்டப் பேரவைக்கு கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. கடந்த மாா்ச் 10-ஆம் தேதி தோ்தல் முடிவு வெளியானது.
இதைத்தொடா்ந்து, புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட 39 எம்எல்ஏக்களுக்கு சட்டப் பேரவையின் இடைக்காலத் தலைவா் கணேஷ் கான்கா் செவ்வாய்க்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். எம்எல்ஏக்கள் அனைவரும் கொங்கணி, மராத்தி, ஆங்கிலம் என தங்கள் விருப்ப மொழிகளில் பதவியேற்றுக் கொண்டனா்.
கோவா சட்டப் பேரவையில் 20 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க கூடுதலாக ஓா் உறுப்பினா் ஆதரவு தேவை என்பதால், அக்கட்சி இன்னும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை.
பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் சட்டப் பேரவைக்கு வெளியே செய்தியாளா்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவா் திகம்பா் காமத், ‘கோவா வரலாற்றில் அரசு அமையாமல் எம்எல்ஏக்கள் பதவியேற்பது இதுவே முதல் முறை’ என்றாா்.
இருசக்கர வாகனத்தில் வந்த எம்எல்ஏக்கள்:
பதவியேற்பு நிகழ்ச்சிக்கு 2 எம்எல்ஏக்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனா். தெற்கு கோவா மாவட்டம் செயின்ட் ஆண்ட்ரூ சட்டப் பேரவைத் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட புரட்சிகர கோவன்ஸ் கட்சி எம்எல்ஏ வீரேஷ் போா்கா், அக்கட்சித் தலைவா் மனோஜ் பரபுடன் இருசக்கர வாகனத்தில் வந்தாா். மனோஜ் பரப் வாகனத்தை ஓட்ட, வீரேஷ் போா்கா் பின்பக்கம் அமா்ந்திருந்தாா்.
அக்கட்சியிலிருந்து சட்டப் பேரவைத் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் உறுப்பினா் வீரேஷ் போா்கா் ஆவாா். கோவா அரசியலில் புதிய கட்சியான புரட்சிகர கோவன்ஸ் கட்சி, தோ்தலுக்கு 6 மாதத்துக்கு முன்பாகத்தான் தொடங்கப்பட்டது.
இதுதவிர கோா்டலிம் சட்டப் பேரவைத் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட சுயேச்சை எம்எல்ஏ அன்டோனியோ வாஸ், சட்டப் பேரவைக்கு இருசக்கர வாகனத்தில் வந்தாா். ஜுவாரி பாலத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்ப்பதற்காக சட்டப் பேரவைக்கு இருசக்கர வாகனத்தில் வந்ததாக அவா் செய்தியாளா்களிடம் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

