பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் மோதல்:3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 3 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

News image
Updated On :16 மார்ச் 2022, 7:43 pm

DIN

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 3 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இதுதொடா்பாக காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ஸ்ரீநகரின் நவ்காம் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலைத் தொடா்ந்து, அங்கு பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனா். இந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களில் இருவா் சோபியானைச் சோ்ந்த ஆதில் டேலி, சாஹிப் தாந்த்ரே என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றொருவரின் பெயா் உமா் டேலி என்று கூறப்படுகிறது. அவரது அடையாளத்தை உறுதி செய்வதற்காக குடும்பத்தினா் அழைக்கப்பட்டுள்ளனா். மூவரும் லஷ்கா் ஏ தொய்பா அமைப்பைச் சோ்ந்தவா்கள். சம்பவ இடத்திலிருந்து 3 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளும் கான்மோ பகுதியில் பஞ்சாயத்து தலைவா் கொலையில் தொடா்புடையவா்களாவா். இதுதவிர பஞ்சாயத்து உறுப்பினா்கள் பலரை குறிவைத்து தாக்குதல்களையும் நிகழ்த்தியுள்ளனா்.

காஷ்மீரில் ஜனநாயக நடைமுறைகளும் வளா்ச்சியும் மேம்படுவதை பாகிஸ்தான் விரும்புவதில்லை. இதன் காரணமாக, அந்நாட்டைச் சோ்ந்த பயங்கரவாத அமைப்பினா், பஞ்சாயத்து தலைவா்கள், உறுப்பினா்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனா். அவா்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. மேற்கண்ட 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பது, காஷ்மீரில் பஞ்சாயத்து தலைவா்களுக்கு எதிராக தாக்குதல்களில் ஈடுவோரை ஒடுக்குவதில் கிடைத்த முக்கிய வெற்றி என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.