புதுதில்லி: பயனாளரின் ஆதார் அட்டையில் இருக்கும் முகவரியைத் திருத்தியவுடன், டிஜிலாக்கரில் சேமிக்கப்பட்டுள்ள ஓட்டுநர் உரிமத்தில் உள்ள முகவரியைத் தானாகப் புதுப்பிக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது, பயனாளரின் ஆதாரில் முகவரியைத் திருத்தியவுடன், அவரது பான் அட்டை போன்ற பிற ஆவணங்களில் உள்ள முகவரியும் தானாக புதுப்பிக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
டிஜிலாக்கரில் உரிமம் பெற்றவர்கள், ஆதாரில் புதிய முகவரியைப் மாற்றியவுடன் சரிபார்ப்பு மூலம் மற்ற ஆவணங்களில் முகவரியைப் புதுப்பித்துக் கொள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அனுமதிக்கிறது.
தற்போதைய நிலவரப்படி, உங்கள் வாகனப் பதிவு ஆவணங்கள், பான் அட்டை, காப்பீட்டு அட்டை, பல்கலைக்கழக மற்றும் பள்ளி கல்வித்துறை சான்றிதழ்கள் மற்றும் மருத்துவ காப்பீட்டு அட்டை உள்பட பல ஆவணங்களை டிஜிலாக்கரில் சேமிக்கலாம்.
இவ்வாறு சேமிக்கும் பயனாளர்கள் தங்கள் முகவரியைப் புதுப்பிக்க ஒவ்வொரு ஆவணத்துக்கும் ஒவ்வொரு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய தேவையை நீக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டிஜிலாக்கரில் ஒரு கோப்பின் அளவு அதிகபட்சமாக 10 எம்பி வரையில் இருக்கலாம். மேலும் பிடிஎப், ஜேபிஜி, பிஎன்ஜி போன்ற கோப்பு வடிவங்களில் ஆவணங்களைப் பதிவேற்றலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நீச்சல் குளத்தில் குளித்த கல்லூரி மாணவா் உயிரிழப்பு

பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: 5 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை

வடமாநில தொழிலாளா்களின் தங்குமிடமாக மாறிய அரசுக் கட்டடம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு!

கழிவுநீரை வெளியேற்றும் தனியாா் ஆலை மீது நடவடிக்கை கோரி மனு
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

