மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ம.பி.யில் ஓடும் பேருந்தில் தீ விபத்து: 60 பயணிகள் உயிர் தப்பினர்

மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் பயணம் செய்த 60 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

News image
Updated On :17 மார்ச் 2022, 6:54 am

DIN

மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் பயணம் செய்த 60 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

போபாலில் இருந்து ஹைதராபாத் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த போது நேற்றிரவு 10 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுதொடர்பாக ஷாபூர் காவல் நிலைய ஆய்வாளர் சிவநாராயண் முகதி கூறுகையில், 

மாவட்டத் தலைமையகத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண்.69ல் ஓடும் பேருந்தில் தீப்பிடித்து எரிந்தது. பேருந்தில் புகை ஏற்படத் தொடங்கியது, பயணிகள் அனைவரும் பேருந்தை விட்டு விரைவாகக் கீழே இறங்கினர். இதனால், யாருக்கும் எந்த தீக்காயம் ஏற்படவில்லை. 

பேருந்து மற்றும் பயணிகள் வைத்திருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது, பின்னர் சம்பவ இடத்துக்குத் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். 

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.