4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கேரளத்தில் கட்டுமானப் பணியின்போது மண்சரிவு: 4 பேர் பலி

கேரள மாநிலம் களமசேரியில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் பலியாகினர். 

News image
Updated On :18 மார்ச் 2022, 3:10 pm

DIN

கேரள மாநிலம் களமசேரியில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் பலியாகினர். 

கேரள மாநிலம் களமசேரியில் உள்ள எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரி அருகே வடமாநிலத் தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் 2.45 மணியளவில் பெரிய குழி அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென மண்சரிவு ஏற்பட்டது. 

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலாளர்களான குடுஸ் மண்டல், நுராமின் மண்டல், ஃபைஜுலா மண்டல் மற்றும் நஜீஷ் அலி ஆஜிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

Story image

மீட்கப்பட்ட தொழிலாளர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கொச்சி நகர காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். 

மொத்தம் 25 பேர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் 7 பேர் மண் சரிவில் சிக்கியதாகவும் அவர்களில் இருவரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்ததாகவும் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.