கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லியிலிருந்து சென்ற விமானத்தில் கோளாறு: பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கம்

தில்லியிலிருந்து இன்று காலை தோஹா நோக்கி புறப்பட்ட விமானம் கராச்சியில் அவசரமாக தரை இறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :21 மார்ச் 2022, 5:34 am

DIN

தில்லியிலிருந்து இன்று காலை தோஹா நோக்கி புறப்பட்ட விமானம் கராச்சியில் அவசரமாக தரை இறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியிலிருந்து 100 பயணிகளுடன் இன்று காலை கத்தார் தலைநகர் தோஹா நோக்கி கத்தார் ஏர்வேஸின் விமானமான க்யூஆர்579 புறப்பட்டுள்ளது. நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கத்தார் ஏர்வேஸ் வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

“இன்று காலை தில்லியிலிருந்து தோஹா சென்ற விமானத்தில் சரக்குப் பகுதியிலிருந்து புகை கிளம்பியதால் கராச்சி விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டன.

அவசரகால சேவைகள் பின்பற்றப்பட்டு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. மேலும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்ட பின்னர் பயணிகள் அனைவரும் தோஹா நோக்கி புறப்படுவார்கள். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து விசாரணை நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.