கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

பாகிஸ்தானில் 18 வயது இந்து பெண் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 18 வயது இந்து பெண் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:45 am

DIN

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 18 வயது இந்து பெண் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ரோஹி சுக்கூரில் உள்ள தெருவின் நடுவில் கடத்தல் முயற்சி தோல்வியடைந்ததையடுத்து இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட பெண் பூஜா ஓட் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இது பாகிஸ்தானில் நடந்த தனிச் சம்பவம் அல்ல. ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான கிறிஸ்துவ மற்றும் இந்துக்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதற்குக் கட்டாயப்படுத்தப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுகின்றனர். மேலும் திருமணம் மற்றும் மதமாற்றம் போன்ற பிரச்னைகளை நீண்டகாலமாக எதிர்கொண்டு வருகின்றனர். 

இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்கள் குறித்து பாகிஸ்தான் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. 

பாகிஸ்தானில் இந்து சமூகத்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகை 1.60 சதவீதமாகவும், சிந்து மாகாணத்தில் 6.51 சதவீதமாகவும் உள்ளதாக புள்ளியியல் விவரம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.