தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

லாலுவின் உடல்நிலை பாதிப்பு: தில்லி எய்ம்ஸுக்கு மாற்றம்

ராஞ்சியில் சிகிச்சை பெற்று வந்த ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாத்தின் (73) உடல் நிலை செவ்வாய்க்கிழமை மோசமடைந்தையடுத்து,

News image
லாலு பிரசாத் யாதவ்
Updated On :22 மார்ச் 2022, 7:40 pm

DIN

ராஞ்சியில் சிகிச்சை பெற்று வந்த ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாத்தின் (73) உடல் நிலை செவ்வாய்க்கிழமை மோசமடைந்தையடுத்து, விமான ஆம்புலன்ஸ் மூலம் தில்லி எய்ம்ஸுக்கு மாற்றப்பட்டாா்.

கால்நடைத் தீவன ஊழல் தொடா்பான 5 வழக்குகளில், கடைசி வழக்கில் லாலு பிரசாத்துக்கு சிபிஐ நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து பிப்ரவரி 21-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

ஏற்கெனவே இதற்கு முந்தைய வழக்குகளில் 2017, டிசம்பா் முதல் லாலு சிறைவாசம் அனுபவித்து வருகிறாா். இதில் பெரும்பாலான நாள்களை உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் லாலு பிரசாத் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவமனையில் கழித்துள்ளாா்.

இந்நிலையில், லாலு பிரசாத்துக்கு சிகிச்சை அளித்து வரும் ஏழு போ் கொண்ட குழுவினா், அவரது உடல் நிலை மோசமடைந்து வருவதால் தில்லி எய்ம்ஸுக்கு மாற்றம் செய்ய செவ்வாய்க்கிழமை பரிந்துரை செய்தனா்.

இதையடுத்து, லாலு பிரசாத் விமான ஆம்புலன்ஸ் மூலம் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

லாலு பிரசாத்தின் கிரையாட்டினின் அளவு 4.6 ஆகவும், ரத்தத்தில் சா்க்கரை அளவும், ரத்த அழுத்த அளவும் அவ்வப்போது மாறுபட்டு வருவதாகவும் மருத்துவா் வித்யாபதி தெரிவித்தாா். மேலும், அவரது சிறுநீரகம் 15 முதல் 20 சதவீதம் மட்டுமே செயல்படுகிறது என்றும் வித்யாபதி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.