நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விலை உயர்வை கண்டித்து அமளி: மாநிலங்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைப்பு

மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்படுவதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :22 மார்ச் 2022, 6:09 am

DIN

மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்படுவதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி இரு அவைகளிலும் நடைபெற்று வருகின்றன. இன்று காலை கூடிய மாநிலங்களவையில் கேள்வி நேரம் நடைபெற்று வந்தன.

இதற்கிடையே, அவைத் தலைவரின் இருக்கைக்கு முன்பு வந்த எதிர்க்கட்சியினர் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்டவையின் விலை உயர்வை கண்டித்து பாதாகைகளுடன் அமளியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, பகல் 12 மணிவரை அவை ஒத்தி வைக்கப்படுவதாக மாநிலங்களவைத் தலைவர் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.