மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உ.பி.யில் பாஜக தலைவர் சுட்டுக் கொலை

உ.த்தரப் பிரதேசத்தில், மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் பாஜக தலைவர் கௌரவ் ஜெய்ஸ்வால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :23 மார்ச் 2022, 6:24 am

DIN

உ.த்தரப் பிரதேசத்தில், மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் பாஜக தலைவர் கௌரவ் ஜெய்ஸ்வால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவு முன்னாள் செயலாளரும், வழக்குரைஞருமான கௌரவ் ஜெய்ஸ்வால் (35) அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

இதுகுறித்து காவல்துறை தெரிவித்ததாவது, 

ஜெய்ஸ்வால் தலையில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த குற்றம் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. 

மகாராஜ்கஞ்ச் நகராட்சியின் தலைவர் கிருஷ்ண கோபால் ஜெய்ஸ்வாலின் மருமகனாக இருந்த ஜெய்ஸ்வால், புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தீவிர பாஜக செயலாளராகவும், கட்சியின் தூய்மை பிரசாரத்தின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.

அவரது மரணம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யுமாறு பா.ஜ.க.வினர் கோரிக்கை விடுத்தாலும், சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை சந்தைகள் மூடப்பட்டன.

சியுராஹா கிராசிங் அருகே உள்ள ஒரு பிரியாணி கடையில் ஜெய்ஸ்வால் அமர்ந்திருந்தபோது இந்த குற்றம் நடந்துள்ளது. அவர் உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.