ம.பி.யில் 12-14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கம்

மத்தியப் பிரதேசத்தில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்தியப் பிரதேசத்தில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. 

மாநிலத் தலைநகர் போபாலின் அரேரா காலனியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் தடுப்பூசி இயக்கத்தை மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தொடங்கிவைத்தார். அங்குத் தகுதியுள்ள சிறுமிக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

வைரஸ் தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி போட முன்வருமாறு வேண்டுகோள் விடுத்தார். நோய்த்தொற்று மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்த தடுப்பூசி அவசியம் என்றார். 

இதுவரை நாட்டில் 181 கோடி கரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் கரோனா மூன்றாம் அலை அந்த அளவுக்கு பாதிக்கவில்லை. மத்தியப் பிரதேசத்தில் இதுவரை 11.44 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com