மிசோரமில் மீண்டும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு

கடந்த ஆண்டு ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் மாநிலத்தில் 33,000 க்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்தன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு, மிசோரம் மீண்டும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (ஏஎஸ்எஃப்) நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் மாநிலத்தில் 33,000 க்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்தன.

இதுதொடர்பாக கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைத் துறை இணை இயக்குநர் டாக்டர் லால்மிங்தங்கா செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் காரணமாக, சமீபத்தில் சில கிராமங்களில் புதிதாக பன்றி இறப்புகள் பதிவாகியுள்ளன.

இருப்பினும், சமீபத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் இறந்த பன்றிகளின் எண்ணிக்கை குறித்து இன்று புதன்கிழமை மாநில தலைமைச் செயலாளர் ரேணு சர்மாவை சந்தித்த பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். புதிய பாதிப்பு குறித்து கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை துறை அதிகாரிகளும் சர்மாவை சந்தித்து தெரிவிப்பார்கள் என்று அவர் கூறினார். 

இதற்கிடையில், சமீபத்தில் கிழக்கு மிசோரமின் சம்பாய் நகரில் சில பன்றிகள் இறந்ததற்கு 'ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்' தான் காரணம் என அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.

பன்றிகள் இறந்ததாகப் புகாரளிக்கப்பட்ட சம்பாய் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் மறு உத்தரவு வரும் வரை மார்ச் 21 முதல் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மிசோரம்-மணிப்பூர் எல்லையில் உள்ள சகவர்தாய் கிராமத்திலும் 'ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால்' பன்றிகள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த ஆண்டு பிப்ரவரி முதல் இதுவரை 100க்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்துள்ளதாக கிராம தலைவர் சங்கதன்குமா தெரிவித்துள்ளார்.

மிசோரமில் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் 'ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்' காரணமாக பன்றி இறப்புகள் குறித்த புகார்கள் எதுவும் இல்லை. 

மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் டாக்டர் கே பெய்ச்சுவா, சமீபத்தில் முடிவடைந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, ​​கடந்த ஆண்டு ஏற்பட்ட 'ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்' பதிப்பால் 33,417 பன்றிகள் இறந்ததால் ரூ.80 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக பேரவையில் தெரிவித்தார்.

மேலும் பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, மொத்தம் 10,910 பன்றிகள் கொல்லப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார்.

வங்க தேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பன்றிகளால் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வந்ததாகவும், இது கடந்த ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி வங்கதேச எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு மிசோரமின் லுங்லே மாவட்டத்தில் உள்ள லுங்சென் கிராமத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது.

பின்னர் போபாலில் உள்ள உயர்-பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் இதனை உறுதி செய்தது. 

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மனிதர்களைப் பாதிக்காது. ஆனால், பன்றிகளுக்கு பேரழிவை ஏற்படுத்தும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com